ஆத்தூர் நகராட்சி ஆணையாளர் கார் மோதி இருவர் பலி

ஆத்தூர் நகராட்சி ஆணையாளர் கார் மோதி கொத்தனார் பலி

 பெத்தநாயக்கன்பாளையத்தில் ஆத்தூர் நகராட்சி ஆணையாளர் கார் மோதி கொத்தனார் பலியானார். 
ஜீப் மோதியது

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கல்பகனூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 38). அதே பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவர்கள் 2 பேரும் கொத்தனாராக வேலை பார்த்து வந்தனர். 

நேற்று அவர்கள் பெத்தநாயக்கன் பாளையத்துக்கு வேலைக்காக வந்தனர். பின்னர் வேலையை முடித்து விட்டு இரவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

பெத்தநாயக்கன்பாளையம் அரசு கால்நடை ஆஸ்பத்திரி அருகே அவர்கள் சாலையை கடக்க முயன்றனர் .

அப்போது சேலத்தில் இருந்து ஆத்தூர் நோக்கி சென்ற ஆத்தூர் நகராட்சி ஆணையாளர் ஜீப் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் 
கொத்தனார் சக்திவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதில் தூக்கி வீசப்பட்ட சக்திவேல், செந்தில்  படுகாயம் அடைந்தார் காரில் இருந்த ஆத்தூர் நகராட்சி ஆணையாளர் வெங்கடாசலம் (பொறுப்பு), டிரைவர் மணி மற்றும் அக்கம் பக்கத்தினர் செந்திலை மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

விபத்து குறித்து தகவல் அறிந்த ஏத்தாப்பூர் போலீசார் விரைந்து சென்று, சக்திவேல் உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது

Comments

Popular posts from this blog

Gaza war: சமூக வலைதளத்தை ஆக்கிரமித்த ‘ALL EYES ON RAFAH' போஸ்டர்!

யார் அவர்?

ربَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا‏