கல்லறை திருநாள் இன்று அனுசரிப்பு
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 2-ந்தேதியை இறந்தவர்கள் நினைவு நாளாக கடைப் பிடிக்கிறார்கள்
வழக்கம்போல் இந்த ஆண்டும் நவம்பர் 2-ந் தேதி(இன்று) இறந்தவர்கள் நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது.
அனைத்து கிறிஸ்தவ கல்லறை தோட்டங்களிலும் இருக்கும் புல் பூண்டுகள் வெட்டி அகற்றப்பட்டு சுண்ணாம்பு தெளித்து சீரமைக்கப்படும்.
பின்னர் தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளில் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி, ஊதுபத்தி எரியவிட்டு அஞ்சலி செலுத்துகிறார்கள்.
இன்று காலை முதல் மாலை வரை கிறிஸ்தவர்கள் திரளாக சென்று கல்லறை தோட்டங்களில் அஞ்சலி செலுத்துவதால் அந்த நாள் கல்லறை திருநாள் என்று அழைக்கப்படுகிறது.
இன்று காலையில் கிறிஸ்தவ ஆலயங்களிலும், மாலை 5 மணிக்கு கல்லறை தோட்டங்களிலும் இறந்தவர்களின் ஆன்மா இளைப்பாறுதலுக்காக திருப்பலி அல்லது சிறப்பு வழிபாடு நடைபெறும்.
அதைத்தொடர்ந்து கல்லறைகளை பங்கு அருட்பணியாளர்கள் புனித நீரால் தெளிப்பார்கள்.
Comments
Post a Comment