இஸ்ரோவின் ஆதித்யா L1 திட்ட இயக்குனர் நிகர்ஷாஜி பற்றி உங்களுக்கு தெரியுமா?

தமிழக அரசு பள்ளியில் படித்த, ஷேக் மீரான்-சைதுள்பீவி தம்பதியினருக்கு இரண்டாவது மகளாக பிறந்த நிகர் சுல்தான் என்பவர்தான் இஸ்ரோவின் ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநர்  நிகர்ஷாஜி பற்றி உங்களுக்கு தெரியுமா?

சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ  செப்டம்பர் 2ஆம் தேதி விண்ணில் செலுத்திய  ஆதித்யா எல் 1 விண் களத்தின் திட்ட இயக்குனரும் தமிழர் தான் 
தொடர்ந்து இஸ்ரோவில் தமிழர்கள் சாதனை படைத்து வரும் நிலையில் இந்த ஆதித்யா எல்1 விண்கலத்தின் திட்ட இயக்குனர் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இஸ்ரோ கடந்த ஜூலை மாதம் விண்ணில் ஏவிய சந்திராயன் 3 விண்கலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி நிலவில் பத்திரமாக தரையரங்கியது. இது மிகப்பெரிய உலக சாதனையாக பார்க்கப் படுகிறது.

இதனால் உலகம் முழுவதும் உள்ள வானியல் ஆராய்ச்சியாளர்கள் உட்பட பலர் இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டி வருகின்றனர்.

இஸ்ரோவின் இந்த தொடர் சாதனை களுக்கு பின்னால் பல்வேறு தமிழர் கள் பணியாற்றி வரும் தகவல்கள் நாம் இப்போது காண முடிகிறது.
இந்நிலையில் இஸ்ரோ அடுத்த ஆய்வு திட்டமான சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் 1 திட்டத்திற்கு தயாராகி கடந்த செப்-2-ல் விண்ணில்
ஏவப்பட்டது.

இந்த நேரத்தில் இந்த ஆதித்யா எல் 1 விண்கலம் குறித்த மற்றொருமுக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

அந்த தகவலின்படி  இந்த திட்டத்தின் திட்ட இயக்குனராக நிகர்ஷாஜி என்ற  பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் 
நிகர்ஷாஜியும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் தான். இவர் தென்காசி மாவட்டம் செங்கோட்டையை பூர்வீகமாகக் கொண்டவர். ஷேக் மீரான்-சைதுள்பீவி தம்பதியினரு -க்கு இரண்டாவது மகளாக நிகர் சுல்தான் என்பவர் பிறந்துள்ளார்.

இவர் தற்போது தனது பெயரை நிகர்ஷாஜி என மாற்றிக்கொண்டு இஸ்ரோவில் பணியாற்றி 
வந்துள்ளார்.
இவரது திறமையை பார்த்து இஸ்ரோ இவருக்கு ஆதித்யா எல் 1 விண்களத் தின் திட்ட இயக்குனராக நியமித்தது.

இவர் செங்கோட்டையில் உள்ள SRM அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி -யில் பள்ளி படிப்பை படித்தவர். இவர் பள்ளியில் படிக்கும் போது பள்ளியில் முதல் மாணவியாக மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 

அதன் பின்பு இவர் நெல்லையில் உள்ள அரசு என்ஜினியரிங் கல்லூரி யில் தனது பட்டப் படிப்பை படித்து -ள்ளார் அதன் பின்பு தனது திறமை -யால் இவர் இஸ்ரோவில் பணியில் சேர்ந்து உள்ளார்.
தற்போது பெங்களூருவில் இவர் வசித்து வருகிறார். இவரது கணவர் வெளிநாட்டில் இன்ஜினியராக பணி யாற்றி வருகிறார். நிகர்ஷாஜியின் சகோதரர் சேக்சலீம் என்பவர் ஐ.ஐ.எம்.மில் விஞ்ஞானி யாகவும், தொடர்ந்து தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி 
பரமகல்யாணி கல்லூரியில் 
பேராசிரியராகவும், தொடர்ந்து துறை தலைவராகவும் பணியாற்றியவர்.

அதேபோல், நிகர்ஷாஜியின் தங்கை ஆஷா என்பவர் கேரளாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நிகர்ஷாஜியின் கணவர் ஷாஜகான் துபாயில் பொறியாளராக பணியாற்றி வரும் நிலையில், அவரது மகன் முகமது தாரிக் நெதர்லாந்து நாட்டில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். மகள் தஸ்நீம் மங்களூரில் எம்.எஸ் மருத்துவம் பயின்று வரும் நிலையில், தற்போது நிகர்ஷாஜி தனது குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வருகிறார்.

தற்போது இவர் இஸ்ரோவின் ஆதித்யா எல் 1 விண்கலத்தின் திட்ட இயக்குனராகப் பணியாற்றி வருவது தமிழர்களுக்கு மற்றொரு பெருமையை கொண்டு வந்துள்ளது.
ஏற்கனவே சந்திராயன் 3 விண்கல -த்தின் திட்ட இயக்குனராக வீரமுத்து வேல் என்பவர் பணியாற்றி தமிழக -த்திற்கு மிகப்பெரிய பெருமையை சேர்த்துள்ள நிலையில் தற்போது நிகர்ஷாஜியும் தமிழகத்திற்கு மற்றொரு பெருமையை தேடித் தந்து உள்ளார். 
விண்ணில் பாயந்த  ஆதித்யா எல் 1 விண்களம் அடுத்த நான்கு மாதம் தொடர்ந்து பயணித்து சூரியனை சுற்றியுள்ள எல் 1 என்ற பகுதிக்கு சென்று சூரியனை ஆய்வு செய்யப் போகிறது.டிரைவ்ஸ்பார்க் கருத்து: இஸ்ரோவில் தொடர்ந்து தமிழர்கள் பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர். இஸ்ரோ படைக்கும் பல சாதனைக ளுக்கு தமிழர்கள் தலைமை வகித்து வருகின்றனர்.மயில்சாமி அண்ணா துரை முதல் சிவன், ரெஹ்னாபேகம் வனிதா முத்தையா, வீரமுத்துவேல்    ஆகியோரை தொடர்ந்து தற்போது நிகர்ஷாஜியும்(நிகர்சுல்தான்) இந்த பட்டியலில் இணைந்துள்ளார். 
இது தமிழர்களுக்கு மிகவும் பெருமையான தருணம் என்று சொல்ல வேண்டும்..

சகோதரர் பெருமிதம்

இது தொடர்பாக, நிகர்ஷாஜியின் அண்ணன் பேராசிரியராகிய ஷேக்சலீம் என்பவர் கூறும்போது,

"இன்று எனக்கு மிகப் பெருமையான நாள். எனது தங்கை நிகர்ஷாஜி இஸ்ரோவில் கடந்த 36 ஆண்டுகளாக சிறந்த விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். 
ஆதித்யா எல் - 1 திட்ட இயக்குனராக பணியாற்றி வருவது எனக்கும், எனது குடும்பத்திற்கும் நான் வாழும் செங்கோட்டை நகரத்திற்கும் மிகவும் பெருமையான தருணம்.  விண்ணில் ஏவப்பட்ட ஆதித்யா எல் 1 வெற்றி பெற எனது வாழ்த்துக்கள். இது நமது நாட்டின் ஒட்டுமொத்த உழைப்பு” எனத் தெரிவித்தார்..

Comments

Popular posts from this blog

Gaza war: சமூக வலைதளத்தை ஆக்கிரமித்த ‘ALL EYES ON RAFAH' போஸ்டர்!

யார் அவர்?

ربَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا‏