முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டம் -ஒழங்கு குறித்த ஆய்வு கூடம்
தமிழ்நாடு தொடர்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழவும், தொழில் வளம் மிகுந்த மாநிலமாக மேலும் வளர்ச்சி பெறவும், குற்றநிகழ்வுகளை தடுத்திடவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆகையால், இந்த காலகட்டத்தில் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்குப் பிரச்னை உருவாகாமல் மிக மிகக் கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.
பள்ளி, கல்லூரிகள் மற்றும்பெண்கள் அதிகம் கூடும் இதர இடங்களில் சிறப்பு ரோந்து படைகள் மூலம் கண்காணித்து தவறு செய்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
குழந்தைகளைத் துன்புறுத்துபவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கைஎடுத்து 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்து தண்டனை பெற்றுத் தருவதை உறுதி செய்ய வேண்டும்-சட்டம் - ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சமூக ஊடகப் பதிவுகளை தீவிரமாகக் கண்காணித்து அவற்றில் சாதி, மத ரீதியான வன்மங்களைப் பரப்பும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை ஒவ்வொருவரும் கடமை, பொறுப்புணர்ச்சியுடன் அவர்கள் பணியில் ஈடுபட்டு, சரியான நுண்ணறிவு தகவல்களைப் பெற்று எந்தவொரு சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படா வண்ணம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
நம் மாநிலம், தொடர்ந்து அமைதிப் பூங்காவாக திகழவும், தொழில்வளம் மிகுந்த மாநிலமாக, மேலும்வளர்ச்சி பெறவும், குற்ற நிகழ்வுகளைப் பெரிதும் குறைப்பதோடு, அவற்றைத் தடுக்க எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
இக்கூட்டத்தில், தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலர் பெ.அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை, தாம்பரம், ஆவடி காவல் ஆணையர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Comments
Post a Comment