ஆயிஷாவின் மகனான முத்துராமலிங்க தேவர்.. இந்து - முஸ்லிம் மாமன் மச்சானாக வாழும் தமிழ்நாட்டின் வரலாறு
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGXQ4fAZmeTCJR90U6Vd3PYTUO7N7EI5Z2SO-EJuhe3G0sGVXkHqVEkpJ8UZTO6EL1NHNmariedm38ttgiW6r5SoSXNtiEuAQQrxOnGESkeNOfNfZrZ276t2MmvRMrQRzBqEoK8iAQvHM/s1600/1698663737022528-0.png)
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று முத்து ராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா நடைபெற உள்ள நிலையில், இந்து - முஸ்லிம் கள் தென் மாவட்டங்களில் மாமன் மச்சான் என உறவுமுறை வைத்து அழைப்பது ஏன்? இரு சமூகத்தினரு க்கும் உள்ள ரத்த பந்தம் என்ன என்ற மதநல்லிணக்க வரலாற்றை அலசுவோம். நாடு முழுவதும் சாதி, மத, இன மோதல்கள், கும்பல் படுகொலைகள் அரங்கேறி வரும் நிலையில் அதற்கு மாற்றமாக நாட்டிற்கே ஒற்றுமை, சமூக நீதி பாடத்தை போதித்து வருகிறது தமிழ்நாடு. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்ற சமூக நீதி தலைவர்களின் போராட்டங்களால் தமிழ்நாடு இன்று சாதி, மத பேதமற்ற சமூக நீதி மண்ணாக திகழ்ந்து வருகிறது. கோவை போன்ற இடங்களில் மத ரீதியான மோதல்கள் ஏற்பட்டாலும் டெல்டா மாவட்டங்களும் தென் மாவட்டங்களும் இந்து முஸ்லிம் ஒற்றுமை புகழிடங்களாக உள்ளன. இந்த மாவட்டங்களில் முக்குலத்தோர் என்று அழைக்கப்படும் கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய மூன்று சமூகங்களை சேர்ந்தவர்களும் இஸ்லாமியர்களும் மாமா, மச்சான், மாப்பிள்ளை என உறவு முறை வைத்து அழைத்துக் கொள்கின்றனர். குடும்ப நிகழ்வுகள், கோயில் திர...