ஆயிஷாவின் மகனான முத்துராமலிங்க தேவர்.. இந்து - முஸ்லிம் மாமன் மச்சானாக வாழும் தமிழ்நாட்டின் வரலாறு
இந்த மாவட்டங்களில் முக்குலத்தோர் என்று அழைக்கப்படும் கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய மூன்று சமூகங்களை சேர்ந்தவர்களும் இஸ்லாமியர்களும் மாமா, மச்சான், மாப்பிள்ளை என உறவு முறை வைத்து அழைத்துக்
கொள்கின்றனர்.
குடும்ப நிகழ்வுகள், கோயில் திருவிழாக்கள், மசூதி, தர்கா நிகழ்ச்சிகள், பண்டிகளை ஒன்றாக கொண்டாடும் வழக்கம் இன்று வரை உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பவர் முத்துராமலிங்க தேவர் என்கிறார், வரலாற்று ஆய்வாளரும் சரித்திரச் சாலையின் சந்திப்புகள் என்ற நூலாசியருமான எஸ்.எம்.கனி சிஷ்தி.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், "1400 ஆண்டுகளுக்கு முன்பு ஆலியப்பா தேவர் என்பவர் மக்கா மாநகருக்குச் சென்று இஸ்லாத்தைத் தழுவினார். ஆலியப்பா தேவர் மீண்டும் தாயகம் திரும்ப, தமது தேவர் இனமக்கள் பெரும்பாலா -னோரை ராமநாதபுரம் மாவட்டத்தில் இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டார்.
அப்படி இஸ்லாத்தில் இணைந்தவர் கள் தான் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள். எனது ஊருக்கு அருகில் உள்ள பசும்பொன் கிராமம் தான் முத்துராமலிங்கத் தேவரின் சொந்தஊர்.முஸ்லிம்பெருமக்களால்
தமக்குப் பாலூட்டி வளர்த்த ஆயிஷா பீவீக்கு, தமக்கு ஆபத்து சூழ்ந்திருப்பதை அறிந்திருந்தும் தேவர் மகன் அவர்கள் எதற்கும் அஞ்சாமல் துணிச்சலுடன் வந்து மரியாதை செலுத்தினார் என்ற வரலாற்றை நான் அந்த விழாவில் உணர்ச்சி ததும்ப எடுத்துச் சொன்னதும், தேவர் இன மக்கள் என்னைச் சூழ்ந்து கொண்டு தேவரய்யாவைப் பற்றி எங்களுக்கே இன்று வரை தெரியாத வரலாற்றைச் சொன்னதற்கு தங்கள் நன்றியைத் தெரிவித்து என்னைக் கட்டித் தழுவினார்கள்." என்று குறிப்பிட்டு உள்ளார்.. தேவர் பெருமகனாரும் தமது பொதுவாழ்வில் முஸ்லிம்கள் மீது பற்றும் பாசமும் மிகுந்த மரியாதையும் தந்து பழகினார். அதற்கு முக்கியக் காரணம் உண்டு. தேவர் அய்யாவைப் பெற்றெடுத்த தாய் இறந்துவிடவே, கமுதியில் வாழ்ந்த ஆயிஷா பீவி அம்மாள் என்ற முஸ்லீம் பெண்மணியிடம் பாலைக் குடித்து வளர்ந்தார். அந்தப் பாச உணர்வால் அவர் மரணம் வரும் வரை அதை மறக்கவில்லை. ஒரு வழக்கில் தேவரய்யா அவர்களை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அந்தப் பிடிவாரண்டிலிருந்து தப்பிக்க தேவர் மகன் சில காலம் தலைமறைவாக வாழ்ந்தார்.
அந்தத் தருணத்தில்தான் அவருக்குப் பாலூட்டிய கமுதி ஆயிஷா பீவி அம்மாள் இறந்துவிட்டார். ஆயிஷா பீவியை எப்படியும் தேவரய்யா பார்க்க வருவார் எனப் புலனாய்வுத் துறை போலிசார் (சி.ஐ.டி.) கமுதியை முற்றுகையிட்டனர். நடு இரவில் ஒரு வில்லு வண்டியில் நீண்ட ஜிப்பா, அடர்ந்த தாடி, தலையில் சிவப்பு துருக்கிக் குல்லாவுடன் ஒருவர் வந்து இறங்கி ஆயிஷாபீவியின் உடலைப் பார்த்துவிட்டு மறுகணமே அடுத்த வில்லு வண்டியில் ஏறித் தலைமறைவானார். முஸ்லிம் பெரியவர் வேடத்தில் வந்தவர் தேவரய்யாதான் என அவர் தப்பிச் சென்ற பின்புதான் புலனாய்வுத் துறை போலிசாருக்குத் தெரியவந்தது.
இன்று வரை தென் மாவட்டங்களில் இதற்கு குறையாத ஒற்றுமையுடன் இந்துக்களும் முஸ்லிம்களும் பழகி வருகிறார்கள். திமுக எம்.எல்.ஏ ஒருவரின் பெயர் கூட காதர் பாட்சா (எ) முத்துராமலிங்கம் என்று உள்ளது. அதேபோல், இதே பெயரில் ஆர்யா நடித்த திரைப்படமும் சில மாதங்களுக்கு முன் வெளியானது.
ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர்.நேதாஜி சுபாஷ் சந்திர போசின்
தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்குத் தமிழகத்தி லிருந்து பெரும் படையைத் திரட்டிஅனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்தப் பேச்சாளரா கவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை அரசு விழாவாகத் தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது.
முத்துராமலிங்க தேவர் குரு பூஜையான இன்று பசும்பொன் முத்து ராமலிங்க தேவரின் 61வது குருபூஜை மற்றும் 116வது ஜெயந்தி விழா மதுரை கோரிப்
பாளையத்தில் நடைப்பெற்றது.
இவ்விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது
Comments
Post a Comment