தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்

சென்னை எழும்பூரில் முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட 49 ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை க்கான கோப்பிற்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்!
முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட
49 ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலைக்கான கோப்பிற்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் சென்னை எழும்பூரில் தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா  தலைமையில் 28/10/2023 அன்று நடைபெற்றது
முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட
49 ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்ய பரிந்துரைத்து தமிழ்நாடு அரசால் கடந்த ஆகஸ்ட் 24 அன்று ஆளுநருக்கு கோப்பு அனுப்பப்பட்டது. 
இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ரவி அக்கோப்பிற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். .
இந்த முற்றுகை போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தமிழகவாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, மதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்
இந்த நிகழ்வில் தலைமை நிர்வாகி கள் மற்றும் ஏராளமான ஆண்களும், பெண்களும் தமுமுகவினர் பல்லாயிரக்கணக்கான கலந்து கொண்டனார் என்பது குறிப்பிடத்தக்கது.


Comments

Popular posts from this blog

வெள்ளிக்கிழமை நினைவூட்டல்

Meet Nigar Shaji, Aditya L1 project director from Tamil Nadu

2024 -நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்