முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு தித்திக்கும் தீபாவளி! தமிழக அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு..
சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்
படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப் பதாவது: அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்க
ளுக்கு தற்போது வழங்கப் படும் 42 சதவீத அகவிலைப்படி 01/07/2023 முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மக்கள் நலனுக்காக அரசு வகுக்கும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத் தும் அரும்பணியில் அரசோடு இணைந்து பணியாற்றும் அரசு அலுவலர்கள் மற்றும்ஆசிரியர்களின் நலனை இந்த அரசு தொடர்ந்து பாதுகாத்து வருகிறது.
முந்தைய அரசு விட்டுச் சென்ற கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமை க்கு இடையேயும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த வாக்குறுதி களைப் படிப்படியாக நிறைவேற்ற முனைப்புடன் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
அந்தவகையில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையை முதல்வர் கனிவுடன் பரிசீலித்து ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வைஅறிவிக்கும் போதெல்லாம் உடனுக்குடன் தமிழக அரசும் அதை பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு செயல்படுத்தப்படும் எனஏற்கெனவே வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து தற்போது 42 சதவீதமாக உள்ள அகவிலைப் படியை 01.07.2023 முதல் 46 சதவீத மாக உயர்த்தி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Comments
Post a Comment