இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் பிஷன் சிங் பேடி (77) காலமானார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சுழற்பந்து ஜாம்பாவனுமான பிஷன் சிங் பேடி 23/10/2023 அன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 77. புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளரான பிஷன் சிங் பேடி 1966ஆம் ஆண்டு முதல் 1979ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடினார்.
மொத்தம் 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 266 விக்கெட்டுகளையும், 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸில் பிறந்த பிஷன் சிங் பேடி, டெல்லி அணிக்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் தனது விளையாட்டு வாழ்க்கையை தொடங்கி உள்ளார்.
முதல் தர கிரிக்கெட்டில் 370 போட்டிகளில் 1,560 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.
Comments
Post a Comment