வங்கிகள் நம்பிக்கை விதையாக கல்விக்கடன் வழங்கவேண்டும் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தகவல்
சேலம், சோனா தொழில் நுட்பக் கல்லூரியில் கல்விக்கடன்மேளாவை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம் இன்று (15.10.2023) தொடங்கி வைத்தார்கள்.
வளமான சமுதாயத்தை உருவாக்க வேண்டியது நம். அனைவரின் கடமையாகும். அந்த வகையில் இளைய தலைமுறையினர் கல்வி யறிவில் சிறந்தவர்களாக விளங்கி னால் மட்டுமே இது சாத்தியமாகும் என்பதால் அனைவருக்குமான கல்வியை வழங்குவதில் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
கல்வி கற்க பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்ற நோக்கில் மாவட்ட நிர்வாகத்தால் இன்றைய தினம் மாபெரும் கல்விக் கடன் மேளா நடத்தப்படுகிறது.
இக்கல்விக்கடன் மேளாவில் சேலம் மாவட்டத்தில் உள்ள 47 வங்கிகள் மற்றும் இதன் 503 வங்கி கிளைகள் கலந்து கொண்டுள்ளனர். 1,000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இம்முகாமில் கலந்து கொண்டனர்.
மாணவ, மாணவிகளின் கல்விக் கடன் விண்ணப்பத்தினை இம்முகாமில் கலந்து கொண்ட வங்கியாளர்களால் பெற்றுக் கொள்ளப்பட்டு கடன் வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முன்னதாக, வங்கியாளர்கள் மற்றும் மாணவர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாணவர்கள் கல்விக்கடன் வேண்டி வங்கிகளுக்கு செல்லும் போது ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் அவற்றை களைவதற்கான வழிமுறைகள் குறித்தும் விரிவான ஆலோசனை நடைபெற்றது.
குறிப்பாக முன்னேறத் துடிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு, வங்கிகள் நம்பிக்கை விதையாக கல்விக் கடனை வழங்க வேண்டும் என வங்கியாளர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
மேலும், வித்யாலட்சுமி போர்ட்டலில் கல்விக்கடன் வேண்டி விண்ணப் பிக்கும் மாணவர்களின் விண்ணப் பத்தினை கனிவுடண் பரிசீலித்து கல்விக்கடனை வழங்க வேண்டியது வங்கியாளர்களின் கடமை என்பதை உணர்ந்து தொடர் நடவடிக்கையாகமாவட்ட நிர்வாகம்
கண்காணித்திடவும்
வங்கியாளர்கள் மற்றும் மாணவர் களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் எப்போதும் தயாராக உள்ளது என்பதை தெரிவிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
இக்கல்விக் கடன் மேளாவில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல் மங்கை தனி மாவட்ட வருவாய் அலுவலர்கீதா பிரியா, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை முதுநிலை கடன் ஆலோசகர் வணங்காமுடி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவரசு, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சிவகுமார், திட்ட இயக்குநர் ( மகளிர் திட்டம்) பெரியசாமி, பாரத ஸ்டேட் வங்கி மண்டல மேலாளர் சரவணன், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் ராஜ்குமார்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல மேலாளர் இராமகிருஷ்ணன் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனை த்து வங்கி கிளை மேலாளர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment