பா.ஜ.க., கூட்டணியால் ம.ஜ.த.,வில் பிளவு!

பா.ஜ.க., கூட்டணியால் ம.ஜ.த.,வில் பிளவு!
லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை ஆதரிக்க மாட்டோம். 'இண்டியா' கூட்டணிக்கு தான் ம.ஜ.த.,வின் ஆதரவு. எங்களுடையது தான் உண்மையான ம.ஜ.த., கட்சி, என,அக்கட்சியின் மாநில தலைவர் இப்ராஹிம் அதிரடியாக அறிவித்தார்
கர்நாடகாவில், ம.ஜ.த., எனும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி செயல்படுகிறது. கட்சியின் தேசிய தலைவராக முன்னாள் பிரதமர் தேவகவுடாவும், மாநில தலைவராக இப்ராஹிமும் செயல்படுகின்றனர்.தேவகவுடாவின் மகனும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி முயற்சியால், பா.ஜ.க, தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், சமீபத்தில் ம.ஜ.த., இணைந்தது.இதனால், ம.ஜ.த., மாநிலத் தலைவர் இப்ராஹிம் உட்பட சில சிறுபான்மை சமூக தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர்.

சில இரண்டாம் கட்ட தலைவர்கள் கட்சியில் இருந்து விலகினர். இந்நிலையில், அதிருப்தி பிரமுகர்
களுடன், மாநில ம.ஜ.த., தலைவர் இப்ராஹிம், பெங்களூரில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
அவர் கூறியதாவது: பா.ஜ., கூட்டணியை ஏற்றுக் கொள்ள மாட்டேன். கூட்டணி குறித்து கட்சியில் ஆலோசிக்கப்
படவில்லை. யாரை கேட்டு குமாரசாமி டில்லி சென்று, தன்னிச்சையாக முடிவு செய்தார். கட்சி என்றால் குடும்பம் அல்ல. அனைவரது கருத்தும் முக்கியம். எங்களுடையது தான் உண்மையான ம.ஜ.த., கட்சி. என்னை யாரும் மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்க முடியாது.19 எம்.எல் ஏ.எக்களுடன் ஆலோசிப்பேன்.
பின், தேசிய தலைவர்தேவகவுடாவை சந்தித்து,எங்கள்முடிவைதெரிவிப்போம் லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை ஆதரிக்க மாட்டோம். 'இண்டியா' கூட்டணிக்கு தான் ம.ஜ.த.,வின் ஆதரவு என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

வெள்ளிக்கிழமை நினைவூட்டல்

Meet Nigar Shaji, Aditya L1 project director from Tamil Nadu

2024 -நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்