உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துக்கள் !அரசுப்பணி கனவை நினைவாக்கிக் கொள்ள தமிழ்நாட்டு விளையாட்டு வீரர் - வீராங்கனையருக்கு வாழ்த்துக்கள்

தமிழ்நாட்டு விளையாட்டு வீரர் - வீராங்கனையருக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கிட பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதல்வர் செயல்படுத்தி வருகிறார்
ஒலிம்பிக் - காமன்வெல்த் போன்ற பன்னாட்டு மற்றும் தேசிய & மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ள நம்முடைய வீரர் - வீராங்கனையருக்கு தமிழ்நாடு அரசுத்துறை & பொதுத்துறை வேலைவாய்ப்புகளில் 3% இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணை அமலில் உள்ளது.இதற்கு தகுதியான விளையாட்டு வீரர்- வீராங்கனையர், sdat.tn.gov.in இணையதளத்தில் தங்களின் விண்ணப்பங்களை அக்டோபர் 31ம் தேதிக்குள் அளிக்கலாம்.இந்த சிறப்பு இடஒதுக்கீட்டை பயன்படுத்தி விளையாட்டு வீரர் - வீராங்கனையர் தங்களின் அரசுப் பணி கனவை நினைவாக்கிக் கொள்ள வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

Comments

Popular posts from this blog

வெள்ளிக்கிழமை நினைவூட்டல்

Eid al-Adha 2021

ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு