இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளா தாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகியோருக்கு தேசிய கல்வி உதவித்தொகை


இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளா தாரத்தில் பின்தங்கியவர்கள்,சீர்மரபி -னர் ஆகிய பிரிவுகளைச்சேர்ந்த நாடு 
முழுவதும் முப்பதாயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரி -யின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப் பட்டது. தமிழகத்தில் 9-ஆம் வகுப்பு,11 ஆம் வகுப்பு பயின்றுவரும் 3,093மாண -வர்களுக்கு இக்கல்வி உதவிதொகை வழங்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள், தேசியத் தேர்வு முகமையால் 29.09.2023 அன்று நடத்த ப்படவிருந்த YASASVI நுழைவுத் தேர்வில் பெற்ற தகுதியின்அடிப்படை யில் தேர்வு செய்யப்படுபவர் என ஒன்றிய அரசால் தெரிவிக்கப்பட்டி -ருந்த நிலையில் தற்போது மேற்படி எழுத்துத் தேர்வானது காலப்பற்றாமை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள தாக ஒன்றிய அரசால் பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும், 8 மற்றும்10ஆம்வகுப்புகளில் 
60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிக -மாக மதிப்பெண்கள் பெற்ற அனை -த்து மாணவர்களும் தேசிய கல்வி உதவித் தொகை இணையதளத்தில் விண்ண ப்பிக்க தகுதியானவர்கள் எனவும், மாணவர்கள் பெற்ற மதிப் பெண்களின் அடிப்படையிலேயே இந்த ஆண்டிற் கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு இக்கல்வி உதவி தொகையானது வழங்கப்படும் எனவும் ஒன்றிய  அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது
இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்கள் அறிந்திட National Scholarship Portal (https://scholarships.gov.in) மற்றும் ஒன்றிய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணைய தளத்தினை(http://socialjustice.gov.in) தொடர்ந்து நோக்கி கல்வி உதவித் தொகை பெற்றுப் பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

The World Water War 1999- 2001 took place in the city of Cochabamba, Bolivia.

ربَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا‏

Meet Nigar Shaji, Aditya L1 project director from Tamil Nadu