காஸாவில் போர் நிறுத்தம்: ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றம்
காஸாவில் மனிதாபிமான
அடிப் படையில் போர் நிறுத்தத்தை அமல்படுத்த வலியுறுத்தி அரபு நாடுகள் கூட்டமைப்பு சார்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப் பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தில், உடனடியாக மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் எனவும், காஸா பகுதிக்குள் அத்தியாவசிய பொருள்கள் சேவைகளை தொடர்ந்து தடையின்றி வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பு மற்றும் சிகிச்சை கோரும்,சிறைபிடிக்கப்பட்டஅனைத்து மக்களையும், உடனடியாகநிபந்தனை யின்றி விடுவிக்க வேண்டும் என்றும் தீர்மானத்தில்தெரிவிக்கப்பட்டுள்ளது
இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இந்த மாதம் மோதல் தொடங்கியிலிருந்து இதுவரை ஏற்பட்டுள்ள உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.காஸாவில் கடந்த 20 நாள்களாக இஸ்ரேல் நடத்தி வரும் சரமாரி தாக்குதலில் இதுவரை 7,326 போ் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை கூறியது.
எனவே மனிதாபிமான அடிப்படை யில் உடனடியாக இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தத்தைக் கொண்டு வர வேண்டும் என ஐ.நா. பொதுச் சபையில் வரைவுத் தீர்மானத்தை ஜோர்டான் அரசு கொண்டு வந்த அடிப்படையில் அரபு நாடுகள் கூட்டமைப்பு சார்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப் பட்டுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment