ربَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNQkP_RX4kpYyCkjOpA74xHAkkUdjFu-cvShx_7BZ7PmERhV3SPf7MP3MyNWIrSfDSz2w12ir_oUvkTWj-fq20g2GpLl2CrGJ1AMpWoJaUouHTg-QMlozVwUB8nZz-mygfKwFwWFRQUhI/s1600/1625036434118822-0.png)
“எங்கள் இரட்சகனே! எங்கள்மனைவி -யரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக!. 25:74 யா அல்லாஹ்! நீ எங்களுக்கு அளித்த சிறந்த அருட் கொடைகளில் எங்கள் குடும்பமும் ஒன்று. அதற்காக உன்னைப் புகழ்கின்றோம் நன்றி செலுத்துகின்றோம் யா அல்லாஹ்! எங்கள் குடும்பத்தினரை உன்னிடத்தில் ஒப்படைக்கின்றோம். அவர்களை கொடிய நோய்கள் அணுகாமல் காப்பாயாக நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுளைத் தருவாயாக!! கெடுதி நினைப்போர்களின் கெடுதியில் இருந்தும்,பொறாமைக்காரர்களின் தீங்கிலிருந்தும் அவர்களைக் காப்பாயாக! எங்கள் குடும்ப உறுப்பினர்களிடையே அன்பையும் பாசத்தையும் உருவாக்குவாயாக!! நேர்வழியில் நடத்தாட்டுவாயாக நேர்வழியில் நடப்பவர்களுடன் இணந்திருக்கச் செய்வாயாக!! அவர்கள் உன்னை தொழுபவர்களாக திக்ரு செய்பவர்களாக என்றென்றும் உன் வழியில் நடப்பவர்களாக ஆக்குவாயாக!! எதிர் பாராத விபத்திலிருந்தும் துர் மரணத்தி...