Posts

Showing posts from May, 2020

மரணித்துவிட்ட தன் அன்பு மனைவி பற்றி இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :-"

Image
மரணித்துவிட்ட தன் அன்பு மனைவி பற்றிஇமாம் அஹ்மத் இப்னுஹன்பல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :- " 20 வருட திருமண வாழ்க்கையில் ஒரு தடவை கூட நாங்கள் சண்டை பிடித்ததில்லை" "அது எவ்வாறு  சாத் தியம்?" என்று கேட்டதற்கு,  "எனக்குக் கோபம் வரும்போது அவள் மௌனமாய் இருப்பாள்,  அவளுக்கு கோபம் வரும் போது நான் மௌன மாய்  இருப்பேன்"  என்றார்கள். திருமண  உறவில்  விட்டு   கொடுத்து வாழுங்கள் ! எல்லா உறவும் ஒரு நாள் நிச்சயமாக  முடிந்தது  விடும் ஆனால் திருமண உறவு மட்டும் தான் சொர்க் கம் வரை தொடர கூடியது !

சேலம் ஆத்தூரில் இன்று மாலை லேசான காற்றுடன் கூடிய மழை மின்சாரம் நிறுத்தம்.

Image
சேலம் ஆத்தூரில் இன்று மாலை லேசான காற்றுடன் கூடிய மழை  மின்சாரம் நிறுத்தம். சேலம் மாவட்டம் ஆத்தூரில் 28/05/20 20 இன்றுமாலை 5.30 மணியளவில் தொடங்கி லேசான காற்றுடன் மழை பெய்தது. இந்த  லேசான மழையின் காரணமாக பகுதி முழுவதும் மின் தடை ஏற்ப்பட்டுள்ளது.  மேலும் இந்த லேசான கோடை மழை யினால் மக்களுக்கோ விவசாயிகளு க்கோ எந்த விதபயனும் இல்லை.கன த்த  மழை பெய்திருந்தால் விவசாயி கள்  சந்தோஷமடைந்திருப்பார்கள் என்று மக்கள் கருதுகின்றனர். பத்து நிமிட மழை பெய்தால் பலமணி நேரம் மின்தடை ஏற்படுகிறது.இதனா ல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின் றனர். தொடர்பு கொண்டு  கேட்டால் ஆத்தூர் பவர் ஹவுசில் பிரச்சனை என்று கூறி வருகிறார்கள். இந்த பத்து நிமிட மழையினாலேயே இந்த கதி என்றால் கனத்த மழை பெய்தால் எந்த நிலைமயில் இந்த மின்சார பராமரிப்பு இருக்கும் என் பதை நினைத்து மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். ஆகவே   இந்த  நிலை  நீடிக்காமல் இருக்க  மின்சார வாரியம் இயக்குதலும் பராமரித்தலும் பிரிவைச் சார்ந்த அதிகார...

"சிறு துரும்பும் பல் குத்த உதவும்" என்பது போல ஹெல்மெட்டை வைத்து திருடனை கைது செய்த போலீசார்.

Image
"சிறு துரும்பும் பல் குத்த உதவும்" என்பது போல ஹெல்மெட்டை வைத்து திருடனை கைது செய்த போலீசார். திருப்பூர் மாநகரில் 19/05/2020அன்று  ஹெல்மெட் அணிந்தபடி கையில் அரி வாளுடன் வந்த  மர்ம  நபர்   ஒருவர் அடகுகடைஊழியர்களைமிரட்டிசுமார் 10 சவரன் தங்கநகையும் 30000/- ரூபா ய் பணமும் கொள்ளையடித்து சென்ற நபரை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் சிசிடிவி காட்சிகளை    ஆய்வு செய்ததில் ஹெல்மெட் மூலம் அடையாளம் காணப்பட்டான். மேலும் அந்த திருடன் சிறுபூலுவப் பட்டி பகுதியை சேர்ந்த அழகுவேல் என்பது தெரியவந்ததையடுத்து கல்லூரி சாலையில் சுற்றித்திரிந்த அவரை மடக்கிப் பிடித்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். தமிழ் மாநில செய்திகளுக்காக செய்தி ஆசிரியர் ஆத்தூர்.ர.மாலிக்

மத்திய அரசிற்கு எதிராக திண்டுக்கல்லில் போராட்டம்

Image
மத்திய அரசிற்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பாக திண்டுக்கல்லில் போராட்டம் திண்டுக்கல்லில் மத்திய அரசிற்கு எதிராக 26/05/2020 அன்று காங்கிரஸ் கட்சி சார்பாக திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் எதிரில் போராட்டம் மூத்த வழக்கறிஞரும் காங்கிரஸ் கமி ட்டியின் மாநில செயற்குழு உருப்பினருமாகிய  குப்புசாமி தலமையில் நடைப்பெற்றது. இப்போராட்டத்தில் ஏழை விவசாயிக ளுக்கு கொடுக்கப்பட்டிருந்த இலவச மின்சாரத்தை மத்தியஅரசு ரத்துசெய் ததையடுத்து கண்டன கோஷங் கள் எழுப்பட்டன.  மேலும் இந்நிகழ்வில் ஏழை விவசாயி களுக்கான இலவச மின்சார இணை ப்பு சேவையை மத்திய ரத்து செய்வ தற்கு எதிராக திண்டுக்கல் தலைமை தபால் நிலையத்தின் முன்பாக நடந்த போராட்டத்தில்எம்.ஜே.எஃப்.லியோன் காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயற் குழு உருப்பினருமாகிய வழக்கறிஞர் குப்புசாமி  காங்கிரஸ் தொண்டர்கள் ஆகியோர் பங்கேற்றார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள ஆர்சனிக் ஆல்பம் 30 ஓமியோபதி மருந்து!

Image
ஒயிட் ரோஸ் பொது நலச்சங்கம் ,அஸ்வின் ஹோமியோ கிளினிக் இணைந்து நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்ல ஓமியோபதி மருந்தினை இலவசமாக வழங்கி வருகின்றனர்.   கொரோனா வைரஸ் தொற்று தீவிர மாகப் பரவி வரும் நிலையில், தேவை யான தடுப்பு நடவடிக்கைகளை மத்தி ய மாநில அரசுகளால் எடுக்கப்பட்டு வருகின்றன.  இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு வராமல் தடுக்கவும்கொரோ னா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும்  'ஆர்சனிக் ஆல்பம் 30' (arsenic album 30C)  என்ற  மருந்தை எடுத்துக்கொள்ள மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.  அதன்படி,இருமல்,தும்மல்தொண்டை  வலி,  மூச்சுத்  திணறல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தால், ஆர்சனிக் ஆல்பம் 30 (arsenic album 30C) என்ற மாத்திரை களை எடுத்துக்கொள்ளலாம்.  நாளொன்றுக்கு  வெறும்  வயிற்றில் காலை மட்டும் பெரியவர்கள் நான்கு, சிறியவர்கள்இரண்டுமாத்திரைகளும் எடுத்துக்கொள்ள வேண்டும்.3நாள் களுக்கு எடுத்துக் கொள்ளவேண்டும் ஓமியோபதி மாத்திரைகள் எடுத்துக் கொண்டபின் 30நிமிடங்களுக்குகாபி டீ உள்ளிட்ட உணவு பொருட்களை சாப் பிடக்கூ...

மேற்படிப்புகளுக்கு கடன் பெற மத்திய அரசின் புதிய உத்தரவு

Image
மேற்படிப்புகளுக்கு கடன் பெற மத்திய அரசின் புதிய உத்தரவு மேற்படிப்புகளுக்கு கடன் பெற மத்திய அரசின் புதிய உத்தரவு பொறியியல், மருத்துவ   பட்டப்படிப்பு  மற்றையபட்டமேற்படிப்புகளுக்கு கடன் பெற இனி  வங்கி  வாசலில்  மாணவர்கள் தங்கள்  பெற்றோருடன் காத்திருந்து அலைய வேண்டாம். அதற்கு பதிலாககல்விக் கடனுக்காக வே‘வித்யா  லட்சுமி  கார்யகிரம்’ Vidya lakshmi Karyakram  எனும்.  இணைய தளத்தை மத்திய அரசு  உருவாக்கி யுள்ளது.   இந்த   தளத்தின்  மூலமே  இனி அனைத்து கல்விக்கடனுக்கான விண் ணப்பங்களும் அனுப்பப்பட வேண்டும். மாறாக எந்த   வங்கியும்   தனிப்பட்ட முறையில்   கல்விக்   கடனுக்கான விண்ணப்பங்களை பரிசீலிக்க தேவை யில்லை என உத்தரவிடப் பட்டுள்ளது. இது  தொடர்பாக   கடந்த  பிப்ரவரி 21 ஆம் தேதி   மத்திய  நிதி அமைச்சகம் அனைத்து அரசு வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும்  ..உத்தரவிட்டுள் ளது.அனைத்து   கல்விக்  கடன்களுக் கான   .வ...

மக்கள் தலை விதி

Image
ஒரு காலை நேர நடைப்பயணத்திற்கு பிறகு, ஒரு டாக்டர்கள் குழு, சாலை யோர உணவகத்தில் தேநீர் அருந்தி கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் தங்களை நோக்கி சிரமப்பட்டு நடந்து வருவதை, அவர் கள் கண்டார்கள். ஒரு மருத்துவர் வருபவரை பார்த்து- "அவருக்கு இடது முழங்காலில் கீல் வாதம் உள்ளது.."என்றார். இரண்டாவது மருத்துவர்- இல்லை.. "அவருக்கு பிளாண்டர் ஃபேசிடிஸ்  உள்ளது ..என்றார். மூன்றாவது மருத்துவர்- அவருக்கு, "ஒரு கணுக்கால் சுளுக்கு .. என்றார். நான்காவது மருத்துவர்அந்த "மனி தனால் முழங்காலை தூக்க முடியாது, அவருக்கு லோயர் மோட்டார்நியூரான் கள் பாதிப்பு  இருப்பதாக தெரிகிறது .." என்றார். ஐந்தாவது மருத்துவர்- "ஆனால் என க்கு அவர் ஒரு ஹெமிபிலீஜியா கத்த ரிக்கோல் நடைபிரச்சனை என்று தோன்றுகிறது," என்றார். ஆறாவது மருத்துவர் அவருக்கான நோயறிதலை அறிவிப்பதற்கு முன்பு... அந்த மனிதர், அந்த டாக்டர் குழுவிடம் வந்து, "எனது ஒரு கால் செருப்பு அறு ந்து விட்டது, அதை சரி செய்யக்கூடிய செருப்பு தைய்ப்பவர் யாராவதுஇங்கு அருகில் இருக்கிறாரா.?"என கேட்கிறார்...

நபித்தோழியர் ஃகான்ஸா(ரலி) உமர்(ரலி) ஆட்சிக்காலம்... காதிஸிய்யா போர்க்களம்....

Image
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு... இஸ்லாமிய படையில் 30ஆயிரம் அல்லது 40ஆயிரம் படைவீரர்கள் மட்டுமே... ஃகான்ஸா (ரலி) அவர்கள் ஜிஹாதிய முழு உணர்வுடன் தனது 4 மகன் களையும் அழைத்து வந்திருந்தார். அவர்" எனதருமைமைந்தர்களே ! இறைவழியில் போரிடுவதைத் தவிர மிகச்சிறந்த நற்கூலி வேறு எதுவுமில்லை, அழியக்கூடிய உலக வாழ்க்கையை விட மறுமையின் நிரந்தரவாழ்க்கை சாலச்சிறந்தது. அல்லாஹ் கூறுகின்றான் يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اصْبِرُوْا وَصَابِرُوْا وَرَابِطُوْا وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏  முஃமின்களே! பொறுமையுடன்இருங் கள்; (இன்னல்களை) சகித்துக்கொள் ளுங்கள்;(ஒருவரை ஒருவர்) பலப்படு த்திக் கொள்ளுங்கள்;  அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங் கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்! (அல்குர்ஆன் : 3:200) நாளை இறைவனின் நாட்டப்படி நலத் துடன் கண்விழித்தால் பெற்றபயிற்சி களைப்  பயன்படுத்தி இறைவனின் உதவியுடன்  எதிரிகளை  முறியடியு ங்கள்.போர் உச்சக்கட்டத்தை எட்டும் போது எங்கும் தீப்பொறிகள் பறக்கும் காட...

செல்வமும் புனித குரானும்

Image
  அரபு நாட்டில் ஷேக் ஒருவர் மிகப் பெரும் செல்வந்தர் அவருக்கு  மனைவி குழந்தைகள்என்று யாரும் இல்லை.பரோபகாரி ஒரு ரமளான்   ஈத்    பெருநாளன்று, தன்னிடம் வேலை பார்க்கும் தொழி லாளர்களுக்கு மிக சிறந்த விருந்து ஏற்பாடு செய்து அவரே முன்னின்று அனைவரையும் உபசரிக்கிறார்.. விருந்து முடிந்தவுடன் ஒவ்வொருவரு டைய   இருக்கைக்கு   முன்.  இரண்டு பெரிய வண்ண கவர்கள் வைக்கப்பட் டுள்ளன.    ஒன்றில்   பணம்   என்றும் மற்றொன்றில்புனிதகுர்ஆன் என்றும் எழுதி வைக்கபட்டுள்ளது.. நண்பர்களே, நீங்கள் எனக்காக உண் மையாக     உழைக்கிறீர்கள்  உங்கள் வேலைக்கேற்ற   அல்லது    அதற்கும் அதிகமாகவே உங்களுக்குசம்பளமும் கொடுத்து வந்துள்ளேன்என்னுடைய  இந்த செல்வம் இறைவனால் அருளப் பட்டது. என்னுடைய செல்வத்தை எவ் வாறு செலவழித்தேன் என்றுஇறைவ -னுக்கு பதில்சொல்ல கடமைபட்டுள் ளேன். உங்கள் முன் இரண்டு கவர்கள் உள் ளன.ஒன்றில் பணம், மற்றொன்றில் புனித குர்ஆன்    இதில்     ...

விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்ய கூடாது பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Image
விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்ய கூடாது. பிரதமருக்கு முதல்வர் கடிதம் சென்னை :  விவசாயிகளுக்கான   இலவச  மின் சார திட்டத்தை ரத்து செய்யும் மத்திய அரசின்   முடிவுக்கு  தமிழக  முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவி -த்துள்ளார். மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துபிரதமர்மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்  எழுதியு ள்ளார். விவசாயிகளுக்கு  மானியம் தரும் முடிவை தமிழக அரசிடமே விட வேண்டும் என அவர் தெரிவித்து -ள்ளார். தமிழ் மாநில செய்திகளுக்காக செய்தி ஆசிரியர் ஆத்தூர்.ர.மாலிக்.